என் மலர்

  சினிமா செய்திகள்

  எனக்கு பிடித்த நடிகர் எனது பக்கத்தில்.. விஜய்யுடன் பயணித்த பிரபல நடிகை..
  X

  வரலட்சுமி - விஜய்

  எனக்கு பிடித்த நடிகர் எனது பக்கத்தில்.. விஜய்யுடன் பயணித்த பிரபல நடிகை..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
  • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  வாரிசு

  இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நடிகர் விஜய் ஹைதராபாத் பயணித்துள்ளார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்துள்ளார். அப்போது விஜய் உடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


  விஜய் - வரலட்சுமி

  அந்த பதிவில், "ஹைதராபாத்திற்கு இவ்வளவு நல்ல விமானம் இதுவரை இருந்ததில்லை. எனக்கு பிடித்த நடிகர் விஜய் எனக்குப் பக்கத்தில். ஒரு நல்ல நாள். கூடவே நிறைய அரட்டையும் சிரிப்பும் கொஞ்சம் லூடோவும் மொத்தத்தில் நல்ல விமானப்பயணம்" என்று வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

  விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  Next Story
  ×