இயக்குனர் சித்திக் மறைவு.. டிரைலர் வெளியீட்டை ஒத்திவைத்த துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.இப்படத்தின் டிரைலரை படக்குழு ஒத்தி வைத்துள்ளது.
இயக்குனர் சித்திக் மறைவு.. டிரைலர் வெளியீட்டை ஒத்திவைத்த துல்கர் சல்மான்
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இயக்குனர் சித்திக் மறைவயடுத்து இன்று வெளியாக இருந்த துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com