இரண்டாவது பாடலை வெளியிட்ட திருவின் குரல் படக்குழு

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'.இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திருவின் குரல்
திருவின் குரல்
Published on

இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

திருவின் குரல்

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வா தாரகையே' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி்யுள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

திருவின் குரல் போஸ்டர்

'திருவின் குரல்' திரைப்படம் நாளை (ஏப்ரல் 14 ) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com