தனுஷை சந்திக்க இந்தியா வரும் ஹாலிவுட் இயக்குனர்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரே மேன்’.இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.
தனுஷ்
தனுஷ்
Published on

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது. 'தி கிரே மேன்' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இந்தியா வருகை தரவிருப்பதாக வீடியோ பதிவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம்! நான் ஜோ ருஸ்ஸோ மற்றும் நான் ஆன்டனி ருஸ்ஸோ, எங்களின் புதிய படமான 'தி கிரே மேன்' படத்திற்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தயாராகுங்கள் இந்தியா, விரைவில் சந்திப்போம்."

அந்த வீடியோவில் தனுஷ் கூறியது, "இது அற்புதமாக உள்ளது. இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும், இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம் மற்றும் பெரிய சேஸ் எல்லாம் உள்ளது. அற்புதமான நபர்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com