வைரலாகும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67-வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நடிகை திரிஷா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தளபதி 67 படக்குழு
தளபதி 67 படக்குழு
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 பட பூஜை

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி67 பட பூஜை

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com