தொடர்ந்து அதிரடி அப்டேட்களை கொடுக்கும் தளபதி 67 படக்குழு.. குஷியில் ரசிகர்கள்..

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தளபதி 67
தளபதி 67
Published on

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 67

இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அறிவித்து வருகிறது.

பிரியா ஆனந்த் -தளபதி 67

அதன்படி, தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அந்த போஸ்டரில் 'தளபதி 67 படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இவர்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்' என்று அவர் படம் குறித்து கூறிய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பு சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com