பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த லோகேஷ்.. வெளியான தளபதி 67 தெறி அப்டேட்..

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி 67
தளபதி 67
Published on

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்

தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

தளபதி 67 போஸ்டர்

இதையடுத்து இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6.7 மணிக்கு வெளியாகும் என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com