விஜய் பட அப்டேட் கொடுக்க ரெடியான தயாரிப்பு நிறுவனம்.. குழம்பிப்போன ரசிகர்கள்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
விஜய்
விஜய்
Published on

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் - விஜய்

தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்

தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 67 புள்ளிகளை வைத்து அப்டேட் இன்று மாலை 6.07 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் குழம்பிப்போன ரசிகர்கள் இது தளபதி 67 குறித்த அறிவிப்பா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com