தளபதி 67: இந்த தேதியை குறித்து வையுங்கள் - அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
Published on

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

லோகேஷ் கனகராஜ்

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com