தலைவர் 170: படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினி படக்குழு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் பட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.இப்படத்தை தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார்.
தலைவர் 170: படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினி படக்குழு
Published on

ரஜினிகாந்த் ஏற்கனவே நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் ஆகஸ்டு மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து தனது 170-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. போலி என்கவுன்ட்டர் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com