இந்தியன் 2: கமலுக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தியன் 2: கமலுக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா?
Published on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பை பகுதியை நிறைவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com