தீபாவளி பண்டிகையை புக் செய்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்
அயலான்

அயலான்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு இன்று காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. அறிவித்தபடி இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனபடி அயலான் திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com