உனக்கு ராம் யாருனு தெரியுமா? வெளியானது துல்கர் சல்மான் பட டிரைலர்..

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்'.இதில் துல்கருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
சீதா ராமம்
சீதா ராமம்
Published on

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சீதா ராமம்

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீதா மகாலஷ்மியிடம் ராமின் கடிதத்தை கொண்டு சேர்பதற்காக ராஷ்மிகா எடுக்கும் முயற்சிகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com