சீதா ராமம் படத்தின் புதிய அப்டேட்

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம்.துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
சீதா ராமம்
சீதா ராமம்
Published on

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சீதா ராமம் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் ஜூலை 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com