துல்கர் சல்மான் படத்தின் அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம்.துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
Published on

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சீதா ராமம்

ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில், இப்படத்தின் 'கண்ணுக்குள்ளே' லிரிக்கல் வீடியோ பாடலை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். மதன் கார்க்கி வரிகளில் காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com