சிம்பு பட நடிகை செய்த செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்..

வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இதானி.
சித்தி இதானி
சித்தி இதானி
Published on

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் சித்தி இதானி.

 சித்தி இதானி

இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் சித்தி இதானி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சித்தி இதானி

இந்நிலையில், இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com