குடும்பங்கள் கொண்டாடும் ஷாருக்கானின் 'டங்கி'

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
குடும்பங்கள் கொண்டாடும் ஷாருக்கானின் 'டங்கி'
Published on

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், 'டங்கி' திரைப்படம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது. இத்திரைப்படம் இதுவரை ரூ.30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40 முதல் 50 சதவீதம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. குடும்பங்கள் 'டங்கி' திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அழகான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'டங்கி' பாக்ஸ் ஆபிஸிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com