புல்லரிக்கிறது..! செல்வராகவன் குறிப்பிட்ட பிரபலம் யார் தெரியுமா?

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் செல்வராகவன் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.செல்வராகவன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக பிரபலம் ஒருவரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
செல்வராகவன்
செல்வராகவன்
Published on

அஜித் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான 'வாலி' படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொம்மை
பொம்மை

பொம்மை

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் 'பொம்மை' படத்தின் ஸ்னீப் பீக் வீடியோவை பதிவிட்டு, என்ன ஒரு நடிப்பு! புல்லரிக்கிறது என்று எஸ்.ஜே. சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com