'சர்தார்' இரண்டாம் பாகத்தில் தீவிரம் காட்டும் படக்குழு

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'.இப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
'சர்தார்' இரண்டாம் பாகத்தில் தீவிரம் காட்டும் படக்குழு
Published on

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

'சர்தார்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வரை வசூலை குவித்தது. இந்நிலையில், 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com