மீண்டும் வருகிறார் சர்தார்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.
சர்தார்
சர்தார்
Published on

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சர்தார்

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சர்தார்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஆஹா ஓடிடி தளம் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com