இப்படிதான்பா எடுத்தோம்.. ட்ரெண்டாகும் சலார் மேக்கிங் வீடியோ

பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.இப்படம் தொடர்ந்து வசூலில் முன்னேறி வருகிறது.
இப்படிதான்பா எடுத்தோம்.. ட்ரெண்டாகும் சலார் மேக்கிங் வீடியோ
Published on

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.295.7 கோடியை வசூல் செய்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வசூல் ரேஸில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சலார்' திரைப்படம் இவ்வளவு ஒரு பிரமாண்ட அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com