முடிதிருத்தும் தொழிலாளிகளை கவுரவப்படுத்திய ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முடிதிருத்தும் தொழிலாளிகளை கவுரவப்படுத்திய ரோபோ சங்கர்
Published on

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் ரோபோ சங்கர், முடிதிருத்தும் தொழிலாளிகளை நேரில் சந்தித்தார். இதையடுத்து முடிதிருத்தும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக, நாளை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில், இப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேம் என்று கூறி அழைப்பிதழ் வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com