ஜெயிலர் வெற்றி.. ரஜினியை சந்தித்த ரெட் ஜெயன்ட் இணை தயாரிப்பாளர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.இந்த படத்தில் நடிகர் ரஜினி கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஜெயிலர் வெற்றி.. ரஜினியை சந்தித்த ரெட் ஜெயன்ட் இணை தயாரிப்பாளர்கள்
Published on

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர்கள் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com