இணையத்தில் ட்ரெண்டாகும் ரத்தம் டிரைலர்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இணையத்தில் ட்ரெண்டாகும் ரத்தம் டிரைலர்
Published on

நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பரபரப்பு காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'ரத்தம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com