பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் பிரபல நடிகரின் படத்தை பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகிவுள்ள திரைப்படம் மகான். துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

மகான்

இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி மூன்று மொழிகளில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. பலரின் கவனத்தை ஈர்த்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இதனை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், சிறந்த படம்... சிறந்த நடிப்பு... புத்திசாலித்தனமான திரைக்கதை. அவருக்கு இந்த படம் பிடித்திருக்கிறது என தலைவர் என்னை போனில் அழைத்து பாராட்டினார். உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா... உங்களின் பாராட்டால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்த்ளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com