நெல்சனுடன் ரஜினி ஆலோசனை.. குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 169' படத்தின் கதை குறித்து இயக்குனர் நெல்சனுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ரஜினி
ரஜினி
Published on

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் கடந்த சில நாட்களாக 'பீஸ்ட்' படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும், இதனால் 'தலைவர் 169' படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இயக்குனர் நெல்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'தலைவர் 169' என்று தான் இயக்கிய படங்களின் பட்டியலை வரிசையில் சேர்த்திருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே வெளியான 'தலைவர் 169' படத்தின் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வைத்திருந்தார். இதன் மூலம் நெல்சன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தலைவர் 169

இந்த நிலையில் படத்தின் கதை விவாதம் குறித்து இயக்குனர் நெல்சனுடன் நடிகர் ரஜினி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com