ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்- கவனம் ஈர்க்கும் ரெய்டு டிரைலர்

விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்- கவனம் ஈர்க்கும் ரெய்டு டிரைலர்
Published on

'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com