இந்தியை திணிப்போம் என்றால்.. இந்தி தெரியாது போயா- வைரலாகும் ரகுதாத்தா டீசர்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரகுதாத்தா'.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தியை திணிப்போம் என்றால்.. இந்தி தெரியாது போயா- வைரலாகும் ரகுதாத்தா டீசர்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com