பகாசூரன் படத்தில் இணையும் பிரபல நடிகர்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் அடுத்த திரைப்படம் பகாசூரன்.செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் இணையவுள்ளார்.
மோகன் ஜி - பகாசூரன்
மோகன் ஜி - பகாசூரன்
Published on

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன் ஜி - ராதாரவி
மோகன் ஜி - ராதாரவி

மோகன் ஜி - ராதாரவி

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்தோடு மகாபாரத புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் டத்தோ ராதாரவி இணையவுள்ளதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி அறிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com