பைக் ரேஸ் பந்தய செட்டில் உருவான ரேசர் திரைப்படம்

அகில் சந்தோஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரேசர்".இப்படத்தின் கதாநாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் லாவண்யா நடிக்கிறார்.
ரேசர்
ரேசர்
Published on

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கும் படம் "ரேசர்". இப்படத்தில் நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்கிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, '"திரௌபதி" சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனை சதீஷ் (எ) சாட்ஸ் ரெக்ஸ் இயக்குகிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி (ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசை அமைத்திருக்கிறார்.

ரேசர்
ரேசர்

ரேசர்

நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் கதாநாயகனை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. "ரேசர்" திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com