புஷ்பாவோட ரூல்.. அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

சுகுமார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'புஷ்பா -தி ரூல்'.இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
புஷ்பா -தி ரூல்
புஷ்பா -தி ரூல்
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா-தி ரூல் போஸ்டர்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் அறிமுக டீசர் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com