பிரபுதேவா படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பஹீரா’.இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபுதேவா
பிரபுதேவா
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பஹீரா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

பஹீரா
பஹீரா

பஹீரா

இந்நிலையில் 'பஹீரா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், அதோடு சூப் பாய்ஸ்-களுக்கு இது தான் உண்மையான சுதந்திர தினம் என்றும் குறிப்பிட்டு போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com