பட தோல்வியால் விரக்தி.. பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு..

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சார்மி கவுர்
சார்மி கவுர்
Published on

இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகர்

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் தோல்வியால் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி அறிவித்துள்ளார்.

சார்மி கவுர்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ''கொஞ்சம் அமைதியாகுங்கள் இளைஞர்களே, சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப்போகிறேன். எங்கள் பட நிறுவனத்தை மேலும் திடமாகவும், உயர்ந்த நிலையிலும் தயாராக்கிக்கொண்டு விரைவில் மீண்டும் திரும்பி வருவோம். அதுவரை வாழவிடு.. வாழு.." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com