வைரலாகும் பா.இரஞ்சித் படத்தின் போஸ்டர்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்
Published on

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா.இரஞ்சித். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

வேட்டுவம்

இதற்கிடையில் இயக்குனர் பா.இரஞ்சித் 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கவுள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உலக புகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com