யோகி பாபு-ஓவியா பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபு-ஓவியா இணைந்து நடித்துள்ளனர்.இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
யோகி பாபு-ஓவியா பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
Published on

நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காண்டிராக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயராகும். சமீபத்தில் சமூக வலைதளத்தில் காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக படத்தின் பெயரை காண்டிராக்டர் நேசமணி என்பதற்கு பதிலாக 'பூமர் அங்கிள்' என்று மாற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை நடிகை வாணி போஜன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

பூமர் அங்கிள்
பூமர் அங்கிள்

பூமர் அங்கிள்

பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை ஓவியா பிரபல ஹாலிவுட் திரைப்படமான வொண்டர் வுமன் உடையில் இருப்பது போன்றும், யோகி பாபு கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் வெளியீடு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com