சின்னத்திரையில் நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறிவந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.இதையடுத்து நிக்கி கல்ராணி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
சின்னத்திரையில் நிக்கி கல்ராணி
Published on

தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறி வந்த நிலையில் சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

இதையடுத்து நிக்கி கல்ராணி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் 'வெல்லும் திறமை' என்ற நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com