புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் - வெளியான மாஸ் அப்டேட்

இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் - வெளியான மாஸ் அப்டேட்
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா. புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் "புஷ்பா புஷ்பா" என துவங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் ப்ரோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com