100 கோடி வசூல்.. மார்க் ஆண்டனி இயக்குனருக்கு BMW கார் வழங்கிய தயாரிப்பாளர்

விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி வெற்றி படமாக மாறியது. மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
100 கோடி வசூல்.. மார்க் ஆண்டனி இயக்குனருக்கு BMW கார் வழங்கிய தயாரிப்பாளர்
Published on

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதோடு, வசூலில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் வினோத் குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கி இருக்கிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com