புதிய கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்த ஜெயிலர் படக்குழு

ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
புதிய கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்த ஜெயிலர் படக்குழு
Published on

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாகவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாகவும் படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com