தமிழ் சினிமாவுக்கு லெஜெண்ட் சரவணன் போன்றவர்கள் அவசியம் தேவை- நடிகர் ஷாம் நெகிழ்ச்சி

வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு லெஜெண்ட் சரவணன் போன்றவர்கள் அவசியம் தேவை- நடிகர் ஷாம் நெகிழ்ச்சி
Published on

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்போது நடிகர் ஷாம் பேசியதாவது:-

கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம், இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார். இதை சொன்ன சில நாட்களில் இயக்குநர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது.

அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குநர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.

இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.

எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார்.

அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com