வெங்கட் பிரபு 'கஸ்டடி'யில் நாக சைதன்யா.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்சி22.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாக சைதன்யா - வெங்கட் பிரபு
நாக சைதன்யா - வெங்கட் பிரபு
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

என்சி 22 படக்குழு

இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கஸ்டடி போஸ்டர்

இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, என்சி22 படத்திற்கு படக்குழு 'கஸ்டடி' என்று தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com