நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. வருகை தந்து ஆச்சரியப்படுத்திய ரஜினி

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
Published on

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ரஜினி
ரஜினி

ரஜினி

தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து உள்ளே சென்ற ரஜினி மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com