நிராகரிக்கப்பட்ட ஜெய்பீம்.. வருத்தத்தில் நானி

தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
நிராகரிக்கப்பட்ட ஜெய்பீம்.. வருத்தத்தில் நானி
Published on: 

இந்திய அரசு சார்பில் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நானி பதிவு

தமிழில் ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை தேர்வு குழு நிராகரித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் நடிகர் நானி உடைந்த இதயமுடைய எமோஜியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஜெய்பீம் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com