காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்

கோவாவில் இன்று திருமணம் செய்துக் கொண்ட நடிகை மௌனி ராய், சூரஜ் நம்பியார் ஆகியோரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மௌனிராய் திருமணம்
மௌனிராய் திருமணம்
Published on

நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினிக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. 

பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்து வந்தார்.

இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி இவர்களது திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

மௌனிராய் திருமணம்

மௌனிராய் திருமணம்

திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com