இது யுவன் ஷங்கர் ராஜா மேஜிக் - நடிகர் தனுஷ்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'.'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா - தனுஷ்
யுவன் சங்கர் ராஜா - தனுஷ்
Published on

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

செல்வராகவன் - தனுஷ்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நானே வருவேன் படக்குழு

இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், 'நானே வருவேன்' படக்குழு முழு வீச்சுடன் பின்னணி இசை ரெக்கார்ட் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com