பாலிவுட்டை கலக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.இவர் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார்.
சாம் சி.எஸ்
சாம் சி.எஸ்
Published on

பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ். 'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா படத்தில் இசையமைத்ததன் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார். இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சாம் சி.எஸ்

இதனைத்தொடர்ந்து அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பின்னணி இசையில் விக்ரம் வேதா இந்தி ரீமேக் டிரைலர் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தி திரையுலகினர் மத்தியில் சாம் சி.எஸ்ஸுக்கு பாராட்டுக்கள் குவிவது மட்டுமல்லாமல் இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com