முனிஷ்காந்த் உடன் இணையும் விஜயலட்சுமி.. வைரலாகும் புகைப்படம்..

முனிஷ் காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’.இப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார்.
விஜயலட்சுமி - முனிஷ்காந்த்
விஜயலட்சுமி - முனிஷ்காந்த்
Published on

இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கும் படம் 'மிடில் கிளாஸ்'. முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கவுள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா மற்றும் கதிர்மொழி பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

படக்குழு

 மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27- ஆம் தேதி தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com