மாவீரன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்

'மாவீரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மாவீரன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்
Published on: 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் 'மாவீரன்' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு காம்போவில் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com