பத்திரிகையாளராக மாறிய அதிதி சங்கர்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''.இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதிதி சங்கர்
அதிதி சங்கர்
Published on

'டாக்டர்', 'டான்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.

மாவீரன்

இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை அதிதி சங்கர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிதி சங்கர்

மேலும், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com