இணையத்தை கலக்கும் மாளவிகாவின் செல்பி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மாளவிகாவின் செல்பி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
மாளவிகா
மாளவிகா
Published on

நடிகர் அஜித் நடித்த ’உன்னை தேடி’  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடிக்கட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சித்திரம் பேசுதடி, சந்திரமுகி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததை அடுத்து குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

தற்போது செல்பி புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார் மாளவிகா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com